பெரம்பலூர், செப். 23: எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் மாநில அளவில் ஆதிதிராவிடர் பிரிவில் இரண்டாமிடம் பிடித்த மாணவி ரா. பார்கவியை மாவட்ட வருவாய் அலுவலர் வி. ராஜன்துரை திங்கள்கிழமை பாராட்டினார்.
2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி ரா. பார்கவி, ஆதிதிராவிடர் பிரிவில் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றார். இந்த மாணவிக்கு, ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ரூ. 20 ஆயிரத்துக்கான காசோலை வழங்கி பாராட்டினார் மாவட்ட வருவாய் அலுவலர் வி. ராஜன்துரை.
நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முனு. துரைசாமி, சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் முருகேஸ்வரி, ஆதிதிராவிட நலத்துறை வட்டாட்சியர் மனோன்மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.