பெரம்பலூர் அருகே உள்ள செங்குணம் அரசு நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதற்கு பொதுமக்கள் பங்களிப்பு தொகையாக ரூ. 1 லட்சத்துக்கான காசோலை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
பெரம்பலூர் அருகே உள்ள செங்குணம் நடுநிலைப்பள்ளி 22.6.2011 முதல் அரசு உயர்நிலைப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய பங்களிப்பு தொகையான ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமதுவிடம், செங்குணம் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ. மகாலிங்கம், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் செ. காமராசு, மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் மா. அண்ணாதுரை உள்ளிட்ட செங்குணம் கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.