பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வியாழக்கிழமை (செப். 25) காலை 10 மணிக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமாக நீர்ப்பாசனம், கடனுதவிகள், வேளாண்மை இடுபொருள்கள், இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாய சங்க பிரிதிநிதகள் மற்றும் விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்று குறைகளை தெரிவித்து பயன் பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார் .