சுடச்சுட

  

  பருத்தியில் செவ்விலைகுறைபாட்டை நீக்க வேளாண் துறை யோசனை

  By பெரம்பலூர்  |   Published on : 09th December 2014 01:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பருத்தியில் செவ்விலை குறைபாட்டை நீக்கினால் கூடுதல் மகசூல் பெறலாம் என்றார் வேளாண்மை இணை இயக்குநர் வே. அழகிரிசாமி.

  இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  பெரம்பலூர் மாவட்டத்தில் 40 ஆயிரம் ஹெக்டேருக்கும் கூடுதலாக பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. தற்போது நிலவி வரும் தட்பவெப்ப நிலையால், ஒருசில இடங்களில் பருத்தியின் வளர்ச்சி குறைந்து காணப்படுகிறது. மேலும், மெக்னீசியம் மற்றும் போரான் நுண்சத்து குறைபாடுகள் தோன்றி, பருத்திச் செடியின் அடிப்பகுதியில் உள்ள முதிர்ந்த இலைகள் சிவந்து காணப்படுகிறது. இந்தக் குறைபாட்டால் மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

  எனவே, இந்தக் குறைபாட்டை சரிசெய்ய 1 டேங்க் (அல்லது) 10 லிட்டர் நீருக்கு மெக்னீசியம் சல்பேட் 100 கிராம், 10 கிராம் ஜிங்க் சல்பேட், 50 கிராம் யூரியா, 10 கிராம் போராக்ஸ் என்ற அளவில், இவற்றுடன் 10 மில்லி ஒட்டும் திரவத்துடன் கலந்து 15 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும். மேலும், மழைநீர் தேங்கி வளர்ச்சி குன்றிய இடங்களில் நீரில் கரையும் உரம் 1 டேங்குக்கு 100 கிராம் 19:19:19 உரம் அல்லது 13:00:45 (மல்டி- கே) தெளித்து, பருத்தியில் கூடுதல் வருவாய் பெறலாம்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai