சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே தீக்காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த பெண் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார்.

    குன்னம் அருகே உள்ள ரெட்டிக்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த பாலச்சந்திரன் மனைவி அஞ்சலம் (38). இவருக்கு, கடந்த சில மாதங்களாக வயிற்றுவலி இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவதிப்பட்ட அஞ்சலம், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலனளிக்கவில்லையாம்.

    இந்நிலையில், கடந்த 6-ம் தேதி வயிற்று வலியால் அவதிப்பட்ட அஞ்சலம், அவரது வீட்டில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். பலத்த காயத்துடன், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார்.  இதுகுறித்து பாலச்சந்திரன் அளித்த புகாரின் பேரில், குன்னம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலாஜி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai