சுடச்சுட

  

  பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், சமூகநலத் துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் மூலம், கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்தில் உள்ள நலிவுற்றோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

  பெரம்பலூர் ஒன்றியத்தைச் சேர்ந்த 20 ஊராட்சிகளில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ், கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் உள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட 60 நபர்களுக்கு, சமூகநலத் துறை சார்பில், இலவச தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் தரேஷ் அஹமது வழங்கினார்.

  நிகழ்ச்சியில், மாநில வேளாண் விற்பனை வாரியத் தலைவர் மா. ரவிச்சந்திரன், மாவட்ட ஊராட்சித் தலைவர் கோ. சகுந்தலா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் (பொறுப்பு) அ. அய்யம்பெருமாள், மாவட்ட சமூகநலத் துறை அலுவலர் கே. பேச்சியம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai