சுடச்சுட

  

  பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி

  By பெரம்பலூர்  |   Published on : 01st March 2014 04:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெரம்பலூர் ஒன்றியத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 2013- 2014-ம் ஆண்டு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் செயல்படும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்- 2009 குறித்த பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

  முகாமை தொடக்கிவைத்த அனைவருக்கும் கல்வி இயக்க உதவித் திட்ட அலுவலர் து. சுப்பிரமணியம் பேசியது: பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்- 2009 மற்றும் பள்ளிகளின் முன்னேற்றத்திற்கு சவாலாக இருக்கக்கூடிய அனைத்து சாராம்சங்களையும் விளக்கும் வகையிலும், பள்ளி செயல்பாடுகளில் தானாக முன்வந்து பங்கேற்கும் வகையிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

  இதில், பள்ளியை மையமாகக் கொண்ட செயல்பாடுகள், பள்ளி வளர்ச்சித் திட்டம் குறித்த ஆலோசனைகள், இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 சுட்டிக்காட்டும் சட்டப் பிரிவுகள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பள்ளிகள் மற்றும் சமூகத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், அநீதிகள், பாகுபாடு மற்றும் பல்வேறு பிரச்னைகளை அகற்றுவதன் மூலம் ஆரோக்கியமான சூழல் உருவாகி, ஜனநாயகம் தழைக்க வழியாக அமையும் என்பதை கருத்தில் கொண்டு இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

  இரண்டாம் கட்ட பயிற்சி, மார்ச் 4,5,6-ம் தேதிகளில் செஞ்சேரி, வேலூர், அம்மாபாளையம் ஆகிய மூன்று மையங்களில் நடைபெற உள்ளது. எனவே, இப்பயிற்சியில் சம்பந்தப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும் என்றார் அவர்.

  பெரம்பலூர் (கிழக்கு, மேற்கு) மற்றும் பெரம்பலூர் வட்டார வளமையம் ஆகிய மையங்களில் நடைபெற்ற பயிற்சியில், பள்ளி மேலாண்மைக் குழு நிறுவப்பட்டுள்ள 81 பள்ளிகளில், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் நலிவடைந்தக் குழந்தையின் பெற்றோர் என, ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் 3 நபர்கள் வீதம் 40 பள்ளிகளிலிருந்து 120 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.  பள்ளி மேலாண்மைக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் உடனிருந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai