சுடச்சுட

  

  பாரதிதாசன் பல்கலை.மகளிர் கல்லூரி ஆண்டு விழா

  By பெரம்பலூர்  |   Published on : 01st March 2014 03:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெரம்பலூர் மாவட்டம், வேப்பூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிர் கல்லூரியில் முதலாவது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

  விழாவிற்கு தலைமை வகித்த திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பதிவாளர் இ. ராம்கணேஷ் மனிதவளத்தை மேம்படுத்துதல், மனம், உடல்நலத்தை வளப்படுத்துதல் குறித்து பேசினார். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் தரேஷ் அஹமது, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் இரா. மாலதி ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில், ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் சேகர், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  பேராசிரியர் எஸ். சங்கீதா வரவேற்றார். ஏ. ஜெயபாரதி நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai