சுடச்சுட

  

  பெரம்பலூர் அருகே எளம்பலூர் கிராமத்தில் உள்ள பிரம்மரிஷி மலையில் சிவராத்திரியை முன்னிட்டு சாதுக்களுக்கு வஸ்திர தானமும், ஏழை, எளியோருக்கு அன்னதானமும் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

  ஸ்ரீ காகமுனி அன்னை சித்தர் எஸ். ராஜகுமார் குருஜி, அன்னை ரோகிணி ராஜ்குமார் தலைமையில், வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மலைமேல் சிவஜோதி ஏற்றப்பட்டு, மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு காகன்னை ஈஸ்வரர் கோவிலில் நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

  அதைத்தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலை கஜ பூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை மற்றும் 210 சித்தர்கள் யாகம் நடத்தப்பட்டது.

  தொடர்ந்து, சாதுக்கள் மற்றும் ஏழை, எளியோருக்கு வஸ்திர தானமும், அன்னதானமும், பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச நோட்டு, புத்தகம், எழுதுபொருள் ஆகியவை வழங்கப்பட்டன.

  விழாவில், சிங்கப்பூர் குருகடாக்க்ஷம் ஸ்ரீ நடராஜா அனந்தபாபா, தொழிலதிபர் ரத்தினவேல், இலங்கை மாதாஜி வித்யா புவிச்சந்திரன், மலேசியா சாந்தி மாதாஜி, திரைப்பட இசையமைப்பாளர் கங்கைஅமரன், நடிகர் ஜெய சூரியகாந்த்ஜி, தொழிலதிபர் பி.டி. ராஜன், எஸ். கோவிந்தராஜன், சர்வஜன பரிவார் அறக்கட்டளை நிர்வாகி ராஜாசிதம்பரம், எளம்பலூர் ஊராட்சித் தலைவர் ஆர்.சி. ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  விழாவுக்கான ஏற்பாடு

  களை பிரம்மரிஷி மலை தவயோகிகள் சுந்தர மகாலிங்கம், தவசிநாதன், மகா சித்தர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai