சுடச்சுட

    

    விவசாயி வீட்டில் ரூ. 1.50 லட்சம் பொருள்கள் திருட்டு

    By பெரம்பலூர்,  |   Published on : 01st March 2014 03:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே விவசாயி வீட்டில் ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருடப்பட்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

    வேப்பந்தட்டை அருகே உள்ள வெள்ளுவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து மகன் வரதராஜன் (55), விவசாயி. இவர், வியாழக்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு வயலுக்கு சென்றுவிட்டாராம்.

    வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு,

    பீரோவில் இருந்த 2 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள், ரூ. 50 ஆயிரம் ரொக்கம் உள்பட ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருடப்பட்டது தெரியவந்தது.

    கை.களத்தூர் போலீஸார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து வரதராஜன் அளித்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் (பொறுப்பு) தே. சிவசுப்ரமணியன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai