சுடச்சுட

  

  பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் ஒருவர் வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தார்.

  பெரம்பலூர் அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் கருணாகரனும் (35), அவரது நண்பரான, அதே கிராமத்தை சேர்ந்த செங்கமலை மகன் சிவக்குமாரும் (35), பாடாலூரில் இருந்து பெரம்பலூருக்கு வெள்ளிக்கிழமை மாலை மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆஞ்சயர் கோவில் அருகே சென்றபோது, அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும், பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதில், கருணாகரன் அங்கு உயிரிழந்தார்.

  இதுகுறித்து கருணாகரனின் உறவினர் சரவணன் (31) அளித்த புகாரின்பேரில், பாடாலூர் காவல் நிலைய ஆய்வாளர் ரவிசக்கரவர்த்தி வழக்குப் பதிந்து விசாரிக்கிறார். 

   

                                                    

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai