சுடச்சுட

  

   மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு ஜெர்மன் நாட்டு மருத்துவ குழுவினர் பரிசோதனை

  By பெரம்பலூர்  |   Published on : 02nd March 2014 03:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், 14 வயதிற்குள்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகளை ஜெர்மன் நாட்டு மருத்துவர்கள் குழுவினர் சனிக்கிழமை பரிசோதனை மேற்கொண்டனர்.

  பெரம்பலூர் மாவட்டத்தில் கை, கால் பாதிக்கப்பட்ட, பாத வளைவுகொண்ட மற்றும் மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. இதில், குணமடைய வாய்ப்புள்ள 14 வயதிற்குள்பட்ட குழந்தைகளை கண்டறியும் முகாம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தில் மருத்துவர்கள் சரவணன், சிவபிரசாத் ஆகியோர் தலைமையில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட 17 குழந்தைகளுக்கும்,  பங்கேற்க இயலாத 28 குழந்தைகளுக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. 

  முகாமில், கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடுதுறையில் இயங்கி வரும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த குழந்தைகளுக்கான முடநீக்கு மையத்தில் உள்ள ஜெர்மன் நாட்டு மருத்துவர்கள் ஜியோர்ஜென் ஜிப்பல், கரோலின், ஹனி சேவியர்ராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் மாற்றுத் திறனாளி குழந்தைகளை பரிசோதனை செய்து, 12 குழந்தைகளுக்கு சொந்த செலவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாகவும்,  இதற்கான போக்குவரத்து செலவினங்களை மாவட்ட நிர்வாகம் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

  தொடர்ந்து, முகாமை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது, ஜெர்மன் நாட்டு மருத்துவ குழுவினரிடம் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பகல் நேர பாதுகாப்பு மையங்கள் குறித்தும், அங்குள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai