சுடச்சுட

  

  அரும்பாவூர் அங்காள பரமேஸ்வரி கோயில் திருவிழா

  By பெரம்பலூர்,  |   Published on : 03rd March 2014 04:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள அரும்பாவூர் அங்காள பரமேஸ்வரி கோயிலில் மயான கொள்ளை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

  2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விழாவை முன்னிட்டு பிப். 28-ம் தேதி பால்குடம் எடுத்தல், சந்தனகாப்பு, காப்பு கட்டுதல், குடி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலகு குத்துதல், காளி புறப்பாடு, வள்ளாராஜன் கோட்டை இடித்தல், மயான கொள்ளை திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

  காலையில் தொடங்கிய மயான கொள்ளை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு உதிரம் கலந்த சாதம் வழங்கப்பட்டது.

  நிகழ்ச்சியில் அரும்பாவூர், அ.மேட்டூர், தழுதாழை, பூலாம்பாடி, வெங்கலம், கிருஷ்ணாபுரம், தொண்டமாந்துறை, வேப்பந்தட்டை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

  தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை பேய் ஓட்டுதல் நிகழ்ச்சியும், சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றது

  . திங்கள்கிழமை அம்மன் மற்றும் வீரபத்திரன் சுவாமி புறப்பாடும், 4-ம் தேதி சத்தாவரணம், சுவாமி அலங்கார ஊர்வலமும் நடைபெறுகிறது. 5-ம் தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai