சுடச்சுட

  

  தஞ்சை மண்டலத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் ரூ. 2,144 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்றார் வங்கியின் செயல் இயக்குநர் ஏ.டி.எம். சாவலி.

  பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி: 

  இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு நாடு முழுவதும் 3,200 கிளைகள் உள்ளன. உலக அளவில் ரூ. 3 லட்சத்து 88 ஆயிரம் லட்சம் கோடிக்கு வணிகம் நடைபெறுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் 1,000 கிளைகள் திறக்கப்பட்டுள்ளன.

  ஸ்ரீலங்கா கொழும்பு, பாங்காங் பகுதிகளில் கிளைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், துபையில் விரைவில் கிளை திறக்கப்பட உள்ளது. தஞ்சை மண்டலத்தில் 227 கிராமங்களை உள்ளடக்கி சேவை புரிந்து வருகிறது. இங்குள்ள ரூ. 1,793 கோடி முன்பணம் திரட்டப்பட்டு, ரூ. 2,144 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

  இதில், வேளாண்மைக் கடனாக ரூ. 1,110 கோடியும், கல்விக் கடனாக ரூ. 214 கோடியும், சிறு, குறு தொழில் கடனாக ரூ. 235 கோடியும், 78,135 நபர்களுக்கு ஸ்மார்ட் அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன.

  பெரம்பலூர், தஞ்சை உள்ளடக்கிய தஞ்சை மண்டலத்தில் 1,51,448 பேருக்கு வேளாண் கடனாக ரூ. 986 கோடியும், கல்விக் கடனாக 3,847 பேருக்கு ரூ. 29 கோடியும், மிகச்சிறு மற்றும் சிறு, குறு தொழில் கடனாக 3,617 பேருக்கு ரூ. 81 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 17 கிளைகள் மூலம் 26,551 பேருக்கு ரூ. 247 கோடி பயிர்க்கடனும், 1,458 பேருக்கு ரூ. 2 கோடி கல்விக்கடனும், 2,128 பேருக்கு சிறு,குறு தொழில் கடனாக ரூ. 30 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. பெரம்பலூரில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கான வங்கி கிளை மார்ச் மாதத்திற்குள் திறக்கப்படும் என்றார் அவர். 

  தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன், செயலர் பி. நீலராஜ், தஞ்சை முதன்மை மண்டல மேலாளர் எஸ். ராஜேந்திரன், முதன்மை மேலாளர்கள் எஸ். சந்திரசேகரன், ராஜா ருக்மாங்கதன், பெரம்பலூர் வங்கி முதன்மை மேலாளர் எஸ். ஆதிமூலம் ஆகியோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai