சுடச்சுட

  

  பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் நேரு யுவகேந்திரா, சி.பி.ஆர். சுற்றுச்சூழல் மையம் மற்றும் என். புதூர் விவேகானந்தர் நற்பணி மன்றம் சார்பில் தேசிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.

  மாவட்ட நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் மணி தலைமை வகித்தார். நெய்குப்பை ஊராட்சித் தலைவர் மகேஸ்வரன் முன்னிலை வகித்தார்.

  பெரம்பலூர் இந்தோ அறக்கட்டளை திட்ட ஒருங்கிணைப்பாளர் மதுபாலன், பில்லாங்குளம் சமூக அலுவலர் சுப்ரமணியன், நேரு யுவகேந்திரா கணக்கர் தமிழரசன் ஆகியோர் சுற்றுச்சூழல் குறித்து விளக்கினர்.

  இதில் 150 பேருக்கு பல்வேறு வகையான பழக்கன்றுகள் வழங்கப்பட்டது.

  இளைஞர் மற்றும் மகளிர் மன்றத்தினர் பங்கேற்றனர். இளைஞர் மன்ற தலைவர் தமிழ்செல்வன் வரவேற்றார். தேசிய இளையோர் படைத்தொண்டர் மணியரசன் நன்றி கூறினார்.       

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai