சுடச்சுட

  

  பாசன ஏரிகளை ஆழப்படுத்த விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

  By பெரம்பலூர்  |   Published on : 03rd March 2014 04:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாசன ஏரிகளை ஆழப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

  பெரம்பலூரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக் குழு கூட்டம், மாவட்டத் தலைவர் ஏ. ராஜு தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

  மாவட்டக் குழு உறுப்பினர் அ. வேணுகோபால் சிறப்புரையாற்றினார்.

  கூட்டத்தில், பெரம்பலூரை வறட்சி மாவட்டமாக அறிவித்து, விவசாய நிலங்களுக்கு நிவாரணம் வழங்குவதோடு பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். கிழுமத்தூர், அத்தியூர், வயலூர், கைப்பெரம்பலூர், ஒகளூர், வடக்களூர், அகரம் சிகூர், எழுமூர், பெருமத்தூர், பெரம்பலூர் பெரிய ஏரி, சின்ன ஏரி, துறைமங்கலம் ஏரி, அரும்பாவூர், தொண்டமாந்துறை உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பாசன ஏரிகளையும் ஆழப்படுத்த வேண்டும். வட்டத் தலைநகரங்களாக உள்ள குன்னம், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு, அனைத்து கிராமங்களையும் இணைக்கும் வகையில் நகரப் பேருந்து இயக்க வேண்டும். அரியலூரிலிருந்து, பெரம்பலூருக்கு நொச்சிக்குளம், ஜமீன்பேரையூர், ஆலத்தூர் கேட் வழியாகவும், பெரம்பலூரிலிருந்து கள்ளப்பட்டி கிராமத்திற்கு உடும்பியம் வழியாகவும் பேருந்து இயக்க வேண்டும்.

  பெரம்பலூர் மாவட்டத்தில் கோமாரி நோய்களால் இறந்த கால்நடைகளை முறையாக கணக்கெடுத்து, நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.

  அகரம்சிகூர் கிராமத்தில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  மாவட்டச் செயலர் வி. ஜெயராமன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் வீ. ஞானசேகரன், சி. அழகுராஜ், முருகன், கலியன், அய்யப்பன், கோவிந்தன், கே. ஜெயா, எஸ். அமுதா உள்பட பலர் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai