சுடச்சுட

  

  பெரம்பலூர் அருகே கவுல்பாளையம் கிராமத்தில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி சிலையை ஞாயிற்றுக்கிழமை சேதமாக்கிய மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

  ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனைக் கைதிகளை விடுவிக்க காங்கிரஸார் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், பெரம்பலூர்- அரியலூர் சாலையில் உள்ள கவுல்பாளையத்தில் அந்தக் கிராம காங்கிரஸ் கமிட்டி சார்பில் அமைக்கப்பட்ட மண்டபத்துடன் கூடிய ராஜீவ் சிலையில் அவரது முகத்தை மர்ம நபர்கள் சேதமாக்கியுள்ளது ஞாயிற்றுக்கிழமை மாலை தெரியவந்தது.

  இதுகுறித்து கவுல்பாளையம் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திவ்யநாதனுக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.   துணைக் கண்காணிப்பாளர் சுருளியாண்டி, மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.என். ராஜா ஆகியோர் சேதமடைந்த சிலையைப் பார்வையிட்டனர். பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.  சிலைக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai