சுடச்சுட

  

  மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டைக்கு மார்ச் 10 வரை புகைப்படம் எடுக்கும் பணி

  By பெரம்பலூர்,  |   Published on : 03rd March 2014 04:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழக அரசின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை அட்டை பெறாதவர்களுக்கு புகைப்படம் எடுக்கும் பணி மார்ச் 10 வரை பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது.

  பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெற ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு மடிக்கணினி இயக்குநர் மூலமாக புகைப்படம் எடுக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

  இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். விஏஓவிடம் காப்பீட்டுத் திட்ட விண்ணப்பத்தில் ஆண்டு வருமானச் சான்றிதல் பெற்று, குடும்ப அட்டை நகல் இணைத்து மடிக்கணினி இயக்குநரிடம் சமர்பிக்க வேண்டும். மேலும் முதியோர், விதவை மற்றும் மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெறுவோர் காப்பீட்டு திட்ட விண்ணப்பத்துடன், அவர்களது அடையாள அட்டை நகலை இணைக்க வேண்டும். புகைப்படம் எடுக்கும் 3 நாள்களுக்கு முன், சம்பந்தப்பட்ட கிராமங்களில் தண்டோரா மற்றும் விளம்பர சுவரொட்டிகள் மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்பட உள்ளது. தகுதியான நபர்கள் குடும்பத்தோடு சென்று புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். எனவே, இதுவரை மருத்துவ காப்பீட்டு அட்டை பெறாதவர்கள், அட்டையில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் செய்வது உள்ளிட்ட அனைத்து விவரங்களுக்கும் 7373005173, 7373004525, 7373004524, 9787485122, 7373005706, 7373005722 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai