சுடச்சுட

  

  பெரம்பலூர் அருகே கோயீலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தொலைபேசி மூலம் திங்கள்கிழமை மிரட்டல் வந்ததால் போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

  பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலுக்குச் சொந்தமான திருமணம் மண்டபத்தில், கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த மணமக்களுக்கு திங்கள்கிழமை திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திருமண வீட்டாரின் உறவினர் ஒருவரது செல்போனுக்கு தொடர்புகொண்ட மர்ம நபர் திருமண மண்டபத்தில் வெடி குண்டு வைத்திருப்பதாகத் தெரிவித்தாராம். 

  அதைத் தொடர்ந்து, தகவலின்பேரில் அங்குச் சென்ற பெரம்பலூர் போலீஸார் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். முடிவில் அங்கு வெடிகுண்டு எதுவும் இல்லையெனத் எனத் தெரியவந்தது.        

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai