சுடச்சுட

  

  பெரம்பலூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.பி. மருதராஜா, கவுல்பாளையம் கிராமத்தில் தேர்தல் பிரசாரத்தை திங்கள்கிழமை தொடங்கினார்.

  பெரம்பலூர் அருகே கவுல்பாளையம் கிராமத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக வேட்பாளர் ஆர்.பி. மருதராஜா,

  கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் பூனாட்சி, மாநிலங்களவை உறுப்பினர் ரத்தினவேல், வேளாண் வணிக வாரியத் தலைவர் மா. ரவிச்சந்திரன், முன்னாள் அமைச்சர் என். ஆர். சிவபதி, பெரம்பலூர் எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன் ஆகியோர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர்.

  அப்போது அரசின் திட்டங்கள், நலத் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூறினர்.

  நிகழ்ச்சியில் நகரச் செயலர் ஆர்.டி. ராமச்சந்திரன், நகர்மன்றத் தலைவர் சி. ரமேஷ், ஒன்றியச் செயலர்கள் என். கே. கர்ணன், பி. கிருஷ்ணசாமி, எஸ். கண்ணுசாமி, மாவட்ட அணி நிர்வாகிகள் எம்.என். ராஜாராம், எஸ். கார்த்திகேயன், ராஜேஸ்வரி, மாவட்ட நிர்வாகிகள் பூவை த. செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  முன்னதாக சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai