சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீ ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் கூறியது:

    பெரம்பலூர் மாவட்டத்தில் 23 தேர்வு மையங்களில் 3,749 மாணவர்களும், 3,820 மாணவிகளும் என 8,447 பேர் தேர்வெழுதுகின்றனர்.

    இவர்களில் 878 மாணவ, மாணவிகள் தனித்தேர்வர்கள். தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றார் அவர். கல்வித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai