சுடச்சுட

  

  பெரம்பலூர் புறநகர்ப் பேருந்து நிலையம் எதிரே கவுல்பாளையத்தில் உள்ள ராஜீவ்காந்தியின் சிலை ஞாயிற்றுக்கிழமை உடைக்கப்பட்டதை கண்டித்தும், சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை கோரியும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சாலை மறியல்,  ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

   பெரம்பலூர் புறநகர்ப் பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் எம்.என். ராஜா தலைமை வகித்தார்.

  கட்சியின் மாவட்டப் பொதுச் செயலர் ரத்தினசாமி, வழக்குரைஞர் த. தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  தொடர்ந்து, அப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில் மாவட்டப் பொறுப்பாளர்கள் திருவண்ணாமலை, பரமசிவம், சையது பதோதின், சாதிக் பாட்ஷா, தங்கவேல், நடேசன், சுப்ரமணியன், மகளிரணி பொறுப்பாளர்கள் ராகிணி, இந்திராணி, நகரத் தலைவர் விஜயகுமார், நகரச் செயலர் சத்யா உள்பட பலர் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai