சுடச்சுட

  

  விளையாட்டுப் போட்டியில் பள்ளிக் கல்வித் துறை சிறப்பிடம்

  By பெரம்பலூர்  |   Published on : 04th March 2014 03:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பள்ளிக் கல்வித் துறை சிறப்பிடம் பெற்றது.

  பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் இருபால் அரசு ஊழியர்களுக்கு பிப். 28-ம் தேதி கூடைப்பந்து, கையுந்துப் பந்து, கபடி, ஆண்களுக்கான கால்பந்துப் போட்டியும், மார்ச் 1ம் தேதி தடகளம், இறகுப் பந்து, மேசைப்பந்து ஆகிய போட்டிகளும் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றன.

  பிப். 28-ல் நடைபெற்ற ஆண்களுக்கான கூடைப்பந்து, கையுந்துப் பந்து, கபடி போட்டியில் கல்வித் துறையும், கால்பந்து போட்டியில் ஊரக வளர்ச்சித் துறையும், பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் கல்வித் துறையும், கபடிப் போட்டியில் ஊரக வளர்ச்சித் துறையும் முதலிடம் பெற்றன.

  மார்ச் 1-ல் நடைபெற்ற ஆண்களுக்கான தடகளப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் பீல்வாடி அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் வி. ராஜா, 200 மீட்டர் ஓட்டத்தில் வருவாய்த் துறையைச் சேர்ந்த பி. பிரபு, 800 மீட்டர் ஓட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் என். தமிழ்ச்செல்வன், 1,500 மீட்டர் ஓட்டத்தில் கல்வித் துறை கே. சிவா, நீளம் தாண்டுதலில் வருவாய்த் துறை எம். சிலம்பரசன், உயரம் தாண்டுதலில் கல்வித் துறை டி. இயர்னெஸ்ட் இம்மானுவேல், குண்டெறிதல் போட்டியில் சுகாதார துறை எல். இளங்குமரன், 4 க்கு 100 மீ. தொடர் ஓட்டத்தில் வருவாய்த் துறை எம். சிலம்பரசன், எ. துக்கன், கே.எம். வெங்கடேசன், ஆர். வெங்கடாசலம் ஆகியோரும், மேசைப்பந்து ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டியில் மருத்துவத் துறை ஜான் நிக்ஷôன், கமலக்கண்ணன் ஆகியோரும் முதலிடம் பெற்றனர். 

  பெண்களுக்கான தடகளம் 100 மீட்டர் ஓட்டத்தில் வருவாய்த் துறை எஸ். முத்துலெட்சுமி, 200 மீட்டர் ஓட்டத்தில் எஸ். பிரபாவதி, 400 மீட்டர் ஓட்டத்தில் சத்துணவுத் துறை எம். வைதேகி, 800 மீட்டர் ஓட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அ. செல்வி, நீளம் தாண்டுதலில் ஊரக வளர்ச்சி துறை எஸ். சத்யா, உயரம் தாண்டுதலில் கல்வித்துறை எஸ். ஆனந்தி, குண்டெறிதலில் வருவாய்த் துறை பி. தனவள்ளி, 4 க்கு 100 மீ. தொடர் ஓட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை எஸ். சத்யா, ஆர். தேன்மொழி, வி. ராதிகா, அ. செல்வி ஆகியோரும், பெண்களுக்கான குழு இறகுப்பந்தில் வருவாய்த் துறையும் முதலிடம் பெற்றன. இதில், அனைத்து போட்டிகளிலும் அதிக புள்ளிகள் பெற்று பள்ளி கல்வித்துறை சிறப்பிடம் பெற்றது.

  அதைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் வெற்றி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது சான்றிதழ்களை வழங்கினார். 

  மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பி. சைமன்ராஜ் வரவேற்றார். தடகளப் பயிற்றுநர் க. கோகிலா நன்றி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai