சுடச்சுட

  

  கிராமிய சுய வேலைவாய்ப்பு தொழில் பயிற்சி நிறைவு

  By பெரம்பலூர்,  |   Published on : 05th March 2014 05:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெரம்பலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு தொழிற்பயிற்சி மையத்தில், சேலைகளில் வேலைப்பாடு, எம்பிராய்டரி மற்றும் அச்சுக் கலை உள்ளிட்ட பயிற்சி நிறைவு விழா அண்மையில் நடைபெற்றது.

  நிகழ்ச்சியில் பங்கேற்ற, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செயல் இயக்குநர் ஏ.டி.எம். சாவலி பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழை வழங்கினார்.

  பயிற்சி மைய இயக்குநர் ஜி. பார்த்தசாரதி பேசியது:

  நிகழாண்டு 2013- 14-ல் இதுவரை 25 வகையான பயிற்சி மூலம் 674 தொழில் முனைவோர் உருவாக்கப்பட்டுள்ளனர். தற்போது, 100 நபர்களுக்கு 4 பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி மையம் கடந்த 2012- 13-ல் சிறப்பாக செயல்பட்டதற்காக மத்திய அரசின் கிராமிய வளர்ச்சித் துறை மூலம் சிறப்புச் சான்றிதழ் பெற்றுள்ளது என்றார் அவர்.

  நிகழ்ச்சியில், தஞ்சை முதன்மை மண்டல மேலாளர் எஸ். ராஜேந்திரன், முதன்மை மேலாளர்கள் எஸ். சந்திரசேகரன், ராஜா ருக்மாங்கதன், பெரம்பலூர் வங்கி முதன்மை மேலாளர் எஸ். ஆதிமூலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai