சுடச்சுட

  

  பெரம்பலூரில் சுகாதார ஆய்வாளர்களுக்கு பயிற்சி

  By பெரம்பலூர்  |   Published on : 05th March 2014 05:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர்களுக்கு, கொசுக்களினால் பரவும் நோய்களை கட்டுப்படுத்துவது குறித்த பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இந்த பயிற்சியை  தொடங்கிவைத்த சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ரவீந்திரன் பேசியது:

  கோடை காலங்களில் தண்ணீரை சுட வைத்து பருகுவதோடு, வீடுகளின் அருகே தண்ணீர் தேங்காமல், குப்பைகளை அகற்றி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தேவையில்லாத டயர், உடைந்த மண் பாண்டங்கள், பிளாஸ்டிக் பொருள்களை அகற்ற வேண்டும். மேலும், கொசுக்களினால் பரவும் நோய்களான மலேரியா, டெங்கு, சிக்கன் குனியா, மூளைக் காய்ச்சல் எவ்வாறு பரவுகிறது, அதை தடுக்கும் முறைகள் குறித்து சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

  ஒரு பகுதியில் 3 பேருக்கு மேல் யாருக்கேனும் வயிற்றுப்போக்கு அல்லது காய்ச்சல் இருந்தால், ஆலத்தூர் வட்டாரத்தை சேர்ந்தவர்கள் 9442926800, வேப்பந்தட்டை வட்டாரத்தை சேர்ந்தவர்கள் 9884761365, வேப்பூர் வட்டாரத்தை சேர்ந்தவர்கள் 9994567121, பெரம்பலூர் வட்டாரத்தை சேர்ந்தவர்கள் 9597387410 ஆகிய

  எண்களில் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றார் அவர்.

  முதுநிலை பூச்சியியல் வல்லுநர் சிவக்குமார், இளநிலை பூச்சியல் வல்லுநர் கிருஷ்ணமூர்த்தி, பெரம்பலூர் சுகாதார அலுவலக இளநிலை பூச்சியியல் வல்லுநர் சுப்பிரமணியன் மற்றும் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட

  சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்றனர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai