சுடச்சுட

  

  வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூரில் பாஜகவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  ஆர்ப்பாட்டத்துக்கு பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலர் பொன். செல்வராஜ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாஜக மாவட்டத் தலைவர் சி. சந்திரசேகர் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தார்.  ஆர்ப்பாட்டத்தில், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நதிநீர் இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.  விவசாயிகளுக்கு பயனளிக்கும் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் அறிக்கையை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். 60 வயதான அனைத்து விவசாயிகளுக்கும் மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம் ஒய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai