சுடச்சுட

    

    மார்ச் 6-ல் உடற்கல்வி ஆசிரியர்கள்,இயக்குநர்களுக்கு பயிற்சி

    By பெரம்பலூர்,  |   Published on : 05th March 2014 05:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், 50 உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குநர்கள், ஆசிரியைகளுக்கான பயிற்சி முகாம் வரும் 6, 7,8-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. 

    இதுகுறித்து மாவட்ட நிரவாகம் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 50 உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குநர்கள், ஆசிரியைகளுக்கான பயிற்சி முகாமில் டேக்வாண்டோ, சிலம்பம், கடற்கரை கையுந்துபந்து, குத்துச்சண்டை, சதுரங்கம், நீச்சல், வாள் சண்டை, கேரம் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.  பயிற்சி முகாமை, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மு. மருதமுத்து தொடங்கி வைக்கிறார். பயிற்சி முகாமின் நிறைவு நாளில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ. மகாலிங்கம், பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai