சுடச்சுட

    

    "தேர்தல் விதிமுறைகளை மீறினால் சட்ட நடவடிக்கை

    By 'பெரம்பலூர்,  |   Published on : 06th March 2014 01:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில், அரசியல் கட்சியினர் தேர்தல் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும், மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தரேஸ் அஹமது.

    பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், மக்களவைத் தேர்தலையொட்டி, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை வகித்து ஆட்சியர் பேசியது: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, பெரம்பலூர் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசியல் கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேர்தல் தொடர்பான புகார்களை, சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்களிடமும், தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலகத்திலும் தெரிவிக்கலாம். வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது, அனுமதிக்கப்பட்ட வாகனங்களில் மட்டுமே வரவேண்டும். மார்ச் 9-ம் தேதி நடைபெறும் சிறப்பு முகாமில், வாக்காளர்களின் பெயரை சேர்க்க, திருத்தம் செய்ய ஒத்துழைக்க வேண்டும் என்றார் அவர்.

    கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜன்துரை, பெரம்பலூர் சட்டப்பேரவை தொகுதி உதவித் தேர்தல் அலுவலர் ப. மதுசூதன் ரெட்டி, எறையூர் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி மு. இந்துமதி, தேர்தல் திட்டமிடலுக்கான ஒருங்கிணைப்பு அலவலர் தா. மலையாளம், தேர்தல் செலவு கணக்கு ஒருங்கிணைப்பு அலுவலர் கார்த்திகாயினி, தேர்தல் நடத்தை விதிமுறைக்கான ஒருங்கிணைப்பு அலுவலர் சிவக்குமார் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai