சுடச்சுட

  

  பெரம்பலூர் மக்களவை தொகுதி தேர்தல் அலுவலர்கள் நியமனம்

  By பெரம்பலூர்,  |   Published on : 06th March 2014 01:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெரம்பலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான தரேஸ் அஹமது.

  இதுகுறித்து அவர் மேலும் கூறியது: பெரம்பலூர் மக்களவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது (94441 75000, 04328-224200, 225700), உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக குளித்தலை சட்டப்பேரவை தொகுதிக்கு குளித்தலை கோட்டாட்சியர் சி. சித்திரிராஜ் (94450 00454, 04323- 222395), லால்குடி சட்டப்பேரவை தொகுதிக்கு லால்குடி சார் ஆட்சியர் டாக்டர் வி. ஜெயசந்திரபானு ரெட்டி (94450 00456, 0431- 2541500), மண்ணச்சநல்லூர் சட்டப்பேரவை தொகுதிக்கு திருச்சி உதவி ஆணையர் (கலால்) ஆர். சரஸ்வதி (82209 16004, 0431- 2465444), முசிறி சட்டப்பேரவை தொகுதிக்கு முசிறி கோட்டாட்சியர் ஆர். ஜெய்னுலாபுதின் (94450 00457, 04326- 260335), துறையூர் (தனி) சட்டப்பேரவை தொகுதிக்கு திருச்சி சிறப்பு திட்டங்களுக்கான தனித் துணை ஆட்சியர் எஸ். செந்தாமரை (94438 49525, 04329- 2415031), பெரம்பலூர் (தனி) சட்டப்பேரவை தொகுதிக்கு பெரம்பலூர் சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி (94450 00458, 04328- 277925) ஆகியோரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரின் நேர்முக உதவியாளராக ஏ. கார்குழலி (98402 26532, 04328- 225888), தேர்தல் சிறப்பு வட்டாட்சியராக செல்வம் (98430 20626, 04328- 225888) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai