சுடச்சுட

  

  மகளிர் கல்லூரியில்கைத்தறி ஆடை விழிப்புணர்வு நிகழ்ச்சி

  By பெரம்பலூர்  |   Published on : 06th March 2014 01:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில், தனலட்சுமி சீனிவாசன் மகளிர் மையம் சார்பில் கைத்தறி ஆடை விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

  நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் முனைவர் அருணா தினகரன் தலைமை வகித்தார். துணை முதல்வர் எஸ்.எச். அப்ரோஸ் முன்னிலை வகித்தார். கைத்தறி ஆடை துணை இயக்குநர் (தமிழக அரசு கும்பகோணம்) எம். பாலச்சந்திரன் அறிமுக உரையாற்றினார்.

  நிகழ்ச்சியில், கைத்தறி ஆடை திட்டம் குறித்து இணை இயக்குநர் டி. தண்டபானி, கைத்தறி நெசவாளர் நலத்திட்டம் குறித்து கைத்தறி வடிவமைப்பு தொழிலக மேலாண் இயக்குநர் டி. எழில்மாறன், கைத்தரி ஆடைகள் குறித்து இயக்குநர் பூபதி ஆகியோர் விளக்கினர்.  தொடர்ந்து, கைத்தறி தொழிலின் முக்கியத்துவத்தை விளக்கும் குறும்படம் ஒளிபரப்பப்பட்டது.   நிகழ்ச்சியில், தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.

  இதற்கான ஏற்பாடுகளை, தனலட்சுமி சீனிவாசன் மகளிர் மைய ஒருங்கிணைப்பாளர்கள் வீ. கோமயில், எம். சுவாதிகா ஆகியோர் செய்திருந்தனர்.

  கரூர் ஆடைகள் குழு தர ஒப்புதல் அலுவலர் ஜி. வேணுகோபால் வரவேற்றார். இணை இயக்குநர் கே. மோகன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai