சுடச்சுட

  

  பெரம்பலூர் தந்தை ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இயற்பியல் துறை சார்பில் அண்மைக்கால பருப் பொருள்களின் கண்டுபிடிப்புகள், நிகழ்வுகள் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

  கருத்தரங்குக்கு, ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே. வரதராஜன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் வே. அயோத்தி முன்னிலை வகித்தார்.  சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற தஞ்சாவூர் சரபோஜி அரசு கல்லூரி இயற்பியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் அ. திருவள்ளுவன், திருச்சி ஈ.வெ.ரா கல்லூரி இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் பெ. சிவக்குமார், ஒளி முதன்மை ஆசிரியர் என்.எஸ். சிதம்பரம், முனைவர் மைக்கேல் ஏஞ்சலோ ஜோதிராஜன் ஆகியோர் நானோ பொருள்களின் பயன்பாடுகள், பருப்பொருள்களின் பயன்பாடுகள் மற்றும் சிறப்பியல்கள் ஆகிய தலைப்புகளில் பேசினர்.  இதில், கல்லூரி துணை முதல்வர் கோ. ரவி, டீன் ஏ. சேவியர் அமலதாஸ், இயற்பியல் துறை பேராசிரியர்கள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.  துறைப் பேராசிரியர் கோ. ஆறுமுகம் வரவேற்றார். இயற்பியல் துறைத் தலைவர் ஜி. செல்வன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai