சுடச்சுட

  

  பயறு வகைப் பயிர் சாகுபடியை அதிகப்படுத்தப் பயிற்சி

  By பாபநாசம்,  |   Published on : 07th March 2014 06:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பயறு வகை பயிர் சாகுபடிப் பரப்பளவை அதிகப்படுத்துதல் குறித்து விவசாயிகளுக்கு புதன்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது.

  பாபநாசம் வேளாண் உதவி இயக்குநர் எம். சேஷன்நரேஷ்சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட வேளாண் துணை இயக்குநர் (மத்தியத் திட்டம்) ஜி. ராமதாஸ் முன்னிலை வகித்தார். மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஜெ.சேகர் பயிற்சியைத் தொடக்கி வைத்தார்.

  இதில் விவசாயிகளுக்கு நெல் சாகுபடி வயல்களின் வரப்புகளில்,கரும்பு சாகுபடி வயல்களில் ஊடுபயிராக பயறுவகை பயிர்களைச் சாகுபடி செய்தல், வயல் வெளிகளில் இறவைப் பாசனம் மூலம் பயறுவகை பயிர் சாகுபடி செய்தல் பற்றிய தொழில் நுட்ப விளக்கங்கள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. பாபநாசம் வேளாண் அலுவலர் பி. கார்த்திகேயன்,வேளாண் துணை அலுவலர் டி. கொளஞ்சிநாதன்,உதவி விதை அலுவலர் டி. மனோகரன்,வேளாண் உதவி அலுவலர்கள் கே. பழநிசாமி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai