சுடச்சுட

  

  பெரம்பலூர் அருகே உள்ள பழைய சாத்தனூரில் ஆகாச கருப்புசாமி, செல்லியம்மன் கோயிலில் முள்படுகள திருவிழா மார்ச் 13-ம் தேதி  நடைபெறுகிறது.

  பெரம்பலுர் அருகே புதுநடுவலூர் ஊராட்சிக்குள்பட்ட பழைய சாத்தனூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன், பாப்பாத்தி அம்மன், செல்லியம்மன், சப்த கன்னிமார்கள் மற்றும் ஆகாச கருப்புசாமி, லாடசன்னாசி கருப்புசாமி, மதுரை வீர கருப்புசாமி, வாமுனி செம்முனி, முத்துசாமி மற்றும் பரிவாத தேவதைகளுக்கு 10-ம் ஆண்டு முப்பூஜை பெருவிழா, முள்படுகள திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் வியாழக்கிழமை (மார்ச் 6) தொடங்கியது.   தொடர்ந்து, வெள்ளிக்கிழமை முதல் 10-ம் தேதி வரை நாள்தோறும் இரவு சுவாமி புறப்பாடும், 11-ம் தேதி மாலை 6 மணிக்கு கருப்புசாமி குடியழைத்தல், பொங்கல் விழா மற்றும் சுவாமி புறப்பாடும், 12-ம் தேதி அம்மன், கருப்பாயி சாமி புறப்பாடும், 13-ம் தேதி முள்படுகளம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

  இதையொட்டி, சந்தன காப்பு, கருப்புசாமிக்கு முப்பூஜை, காவு குடிபூஜை, பாரிவேட்டை நிகழ்ச்சியும், நள்ளிரவு 2 மணிக்கு அருள்வாக்கு நிகழ்ச்சியும், முள்படுகள நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 14-ம் தேதி காலை 11 மணிக்கு மஞ்சள் நீராட்டு, குடிவிடுதல் நிகழ்ச்சியும், 20-ம் தேதி உதிர்வா பூஜை, முனிபூஜை, அருள்வாக்கு நடைபெற உள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai