சுடச்சுட

    

    பெரம்பலூர் நகரை சேர்ந்த இளைஞர்கள் 50 பேர் மதிமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தனர்.

    பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் விடுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மதிமுக மாவட்ட செயலர் செ. துரைராஜ் தலைமையில், ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே. வரதராஜன் முன்னிலையில் 11-வது வார்டை சேர்ந்த இளைஞர்கள் 50 பேர் மதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். இந்த இளைஞர்களுக்கு மாவட்ட பொருளாளர் எஸ். ஜெயசீலன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியின்போது, மாவட்ட அவைத் தலைவர் செல்ல. கதில்வேல், நகரச் செயலர் ஏ.ஆர். ராஜேந்திரன், ஒன்றிய இளைஞரணி துணைச்செயலர் எஸ். ராமலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.

     

     

                                                      

           

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai