சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வெள்ளிக்கிழமை இரவு நடந்து சென்ற மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை மருவத்தூர் போலீஸார் தேடி வருகின்றனர்.

    குன்னம் அருகே உள்ள அசூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மனைவி வேம்பு (58). இவர், பேரளி கிராமத்தில் உள்ள மகள் சின்னம்மாளை பார்ப்பதற்காக வெள்ளிக்கிழமை இரவு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 3 மர்ம நபர்கள், வேம்பு கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பியோடினர்.

    இதுகுறித்து வேம்பு அளித்த புகாரின்பேரில், மருவத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வனிதா வழக்குப் பதிந்து, நகையை பறித்து சென்ற திருநெல்வேலியை சேர்ந்த புரோவின் சென்டை (32) வெள்ளிக்கிழமை இரவு கைது செய்து, தப்பியோடிய இரண்டு பேரையும் தேடி வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai