சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே முதியவர் ஒருவர் இறந்து கிடந்தது சனிக்கிழமை தெரியவந்தது.

    திருச்சி மாவட்டம், திருப்பட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ரெ. சிங்காரம் (63). இவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு வெளியில் வந்து செட்டிக்குளம் ஸ்ரீபாலதண்டாயுதபாணி கோவிலில் தங்கியிருந்ததாக தெரிகிறது. இந்நிலையில்,  செட்டிக்குளம் கிராமத்திலிருந்து நாட்டார்மங்கலம் கிராமத்துக்கு செல்லும் வழியில் சிங்காரம் இறந்து கிடந்தது சனிக்கிழமை தெரியவந்தது.

    இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் பாலுசாமி அளித்த புகாரின்பேரில், பாடாலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேந்தர் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai