சுடச்சுட

  

  பெரம்பலூர் அருகே உள்ள பொம்மனப்பாடியில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அண்மையில் விடப்பட்டது.

  பொம்மனப்பாடி கிராமத்தில் உள்ள 2, 3,  ஆகிய வார்டுகளில் மின் திறன் குறைவு காரணமாக மின் விளக்கு, பேன், கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதன பொருள்கள் பயன்படுத்த முடியாமல் இருந்தது. இதையடுத்து, அங்கு அதிக மின் திறன்கொண்ட மின்மாற்றி அமைத்து மின் வசதிசெய்து தரவேண்டுமென ஊராட்சி நிர்வாகம் சார்பில் மின் வாரியத்திற்கு கோரிக்கை விடப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மின்சார வாரியம், பொம்மன்பாடியில் புதிதாக அதிக மின் திறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அண்மையில் விடப்பட்டது.

  இந்நிகழ்ச்சியில், உதவி செயற்பொறியாளர் கரிகாலன், உதவி மின் பொறியாளர் ராஜேந்திரன், ஊராட்சி தலைவர் சசி, துணை தலைவர் நடராஜன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai