சுடச்சுட

  

  பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கல்லூரியின் 2-ம் ஆண்டு விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  விளையாட்டுப் போட்டி தொடக்க விழாவிற்கு, தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன் தலைமை வகித்தார். செயலர் பி. நீல்ராஜ் முன்னிலை வகித்தார்.

  தொடர்ந்து, 100 மீட்டர், 200 மீட்டர், 1,500 மீட்டர் ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெம்கானிக்கல் துறையும், ஆண்களுக்கான தனிநபர் பட்டத்தை மாணவன் ஏ. கெவின்ராஜும், மாணவி ஆர். ஷாமிலியும் பெற்றனர்.

  அதைத்தொடர்ந்து, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கிய சென்னை சி.டி.எஸ் நிறுவன திட்ட மேலாளர் செண்பகபிரபு ஜெயக்குமார் பேசியது:

  மாணவ, மாணவிகளுக்கிடையே உள்ள தனித்திறனை விளையாட்டுப் போட்டிகள் மூலம் வெளிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு மனிதனும் புத்திசாலியாக, அறிவாளியாக பிறப்பதில்லை. அவர்களுடைய விடாமுயற்சி, கடின உழைப்பு தன்னம்பிக்கை, சந்தர்ப்ப சூழ்நிலையே வெற்றியாளராக மாற்றுகிறது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதோடு மட்டுமின்றி, விளையாட்டுத் துறையிலும் வெற்றி பெற்று மாவட்ட, மாநில, தேசிய அளவில் பதக்கங்கள் பெற முயற்சிக்க வேண்டும் என்றார் அவர்.

  விழாவில், கல்லூரி முதல்வர் டி. இளங்கோ, சீனஇவாசன் பொறியியல் கல்லூரி முதல்வர் கே. இளங்கோவன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பி. செந்தில்குமார், டி. பிரித்திவிராஜ், ஏ. அருண்தினேஷ், உடற்கல்வி இயக்குநர் எம். ராஜேஷ் உள்ளிட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

  பேராசிரியர் எஸ். ராஜ்குமார் நன்றி கூறினார்.

                                                    

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai