சுடச்சுட

  

  குரும்பலூர் பேரூராட்சியில் அதிமுக பிரசாரம்

  By பெரம்பலூர்  |   Published on : 10th March 2014 04:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குரும்பலூர் பேரூராட்சிப் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் ஆர்.பி. மருதராஜா, வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தார்.

  பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரான ஆர்.பி. மருதராஜா, குரும்பலூர் பேரூராட்சிக்குள்பட்ட குரும்பலூர், பாளையம் பகுதி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

  நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்டச் செயலரும், மாநில வேளாண் விற்பனை வாரியத் தலைவருமான மா. ரவிச்சந்திரன், பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ இரா. தமிழ்செல்வன் ஆகியோர், தமிழக அரசின் சாதனை திட்டங்கள், நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தனர்.

  தமிழக விவசாயிகள் கட்சி மாநிலத் தலைவர் ப. ராமராஜன், பெரம்பலூர் நகர செயலர் ஆர்.டி. ராமச்சந்திரன், எம்.ஜி.ஆர் மன்ற மாவட்டச் செயலர் எம்.என். ராஜாராம், குரும்பலூர் பேரூராட்சித் தலைவர் என். பாப்பம்மாள், துணைத் தலைவர் செந்தில்குமார், குரும்பலூர் நகரச் செயலர் செல்வராஜ், முன்னாள் நகரச் செயலர்கள் பழனிமுருகேசன், ராமையா, இளைஞர் பாசறை மாவட்டச் செயலர் செல்வகுமார், மாவட்டப் பொருளாளர் பூவை த. செழியன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் இரா. வடிவல், ஒன்றியக் குழு உறுப்பினர் ஜெயக்குமார், மாவட்ட பிரதிநிதி சந்திரசேகரன், ஒன்றிய இலக்கிய அணி செயலர் பெருமாள் உள்பட பலர் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai