சுடச்சுட

  

  கைரேகை வருகை  பதிவு முறையை ரத்து செய்ய வலியுறுத்தல்

  By பெரம்பலூர்  |   Published on : 10th March 2014 04:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரசு மருத்துவமனைகளில் டாக்டர்களுக்கு விதித்துள்ள கைரேகை வருகை பதிவு முறையை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

  பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம், மாநிலத் தலைவர் செந்தில் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  மாநில செயலர் பாலகிருஷ்ணன், மாநில பொருளாளர் பொன்னுராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  மாநில துணைத் தலைவர்கள் நவரத்தினசாமி, அருள்பிரகாஷ், மாவட்ட இணை செயலர்கள் கோவிந்தராஜ், திலீபன், மாவட்ட செயலர் அரவிந்தன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கினர்.

  கூட்டத்தில், மருத்துவக் கல்வி இயக்ககம் சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் காலியிடங்களில் சிலவற்றை மறைத்து, அந்த பணியிடங்களில் மூத்த மருத்துவர்களை நியமிக்காமல், இளைய மருத்துவர்களை நியமித்து பணி நியமன ஆணை வழங்கிய பிறகு கலந்தாய்வு நடத்தியதைக் கண்டிப்பது. இந்த முறையில் ஏற்கெனவே வழங்கிய பணி நியமன ஆணையை ரத்து செய்ய வேண்டும். பணியில் 8, 15, 17, 20 என ஆண்டு காலமுறை பதவி உயர்வு வழங்குவது குறித்து நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்குகளால் பதவி உயர்வு அளிப்பதற்கு விதித்துள்ள தடையாணையை ரத்து செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு விதித்துள்ள கைரேகை வருகை பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும். மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இணையாக 16 மாவட்டங்களில் 4 மருத்துவர்களைக் கொண்டு அவரச சிகிச்சை பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது. இதேபோல, இதர மாவட்டங்களிலும் அவசர சிகிச்சை பிரிவு தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

  பெரம்பலூர் மாவட்டத் தலைவர் டாக்டர் அர்ஜூனன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் டாக்டர் தர்மலிங்கம் நன்றி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai