சுடச்சுட

  

  பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் விதிகளுக்கு எதிரான வகையில் உள்ள சுவர் விளம்பரங்களை அழிக்க, 6 குழுக்கள் அமைக்கப்பட்டு சுவர் விளம்பரங்கள் அழிக்கப்படுகின்றன என்றார் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவருமான தரேஷ் அஹமது. 

  இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  தேர்தல் ஆணைய அறிவுரைப்படி, தேர்தல் விதிகளுக்கு எதிரான வகையில் செய்யப்பட்டுள்ள சுவர் விளம்பரங்களை அழிக்க 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பெரம்பலூர் நகராட்சிக்கு ஒரு குழுவும், பெரம்பலூர் வட்டம் மற்றும் குரும்பலூர் பேரூராட்சிக்கு ஒரு குழுவும், குன்னம் வட்டம் மற்றும் லப்பைக்குடிகாடு பேரூராட்சிக்கு ஒரு குழுவும், வேப்பூர் மற்றும் வேப்பந்தட்டை வட்டங்களுக்கு தலா ஒரு குழுக்கள் என பெரம்பலூர் மாவட்டம் முழுவதிலும், தேர்தல் விதிகளுக்கு எதிரான வகையில் செய்யப்பட்டுள்ள சுவர் விளம்பரங்களை அழிக்க 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

  இந்தக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை முதல் சுவர் விளம்பரங்களைக் கண்டறிந்து அழித்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai