சுடச்சுட

  

  தொழிற்பயிற்சி மையங்களில் "கிரில்டெக்' பிரிவு தேவை

  By பெரம்பலூர்,  |   Published on : 10th March 2014 04:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகத்தில் கல்வித் துறையில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி மையங்களில் கிரில் தொழிலுக்கென, கிரில் டெக் தனிப்பாட பிரிவைத் தொடங்க வேண்டுமென, கிரில் தயாரிப்பாளர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

  பெரம்பலூரில் தமிழக கிரில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முதலாமாண்டு தொடக்க விழா மற்றும் பெரம்பலூர் மாவட்டக் கிளை தொடக்க விழா, நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா மற்றும் மாநில செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  மாநிலத் தலைவர் எஸ். பச்சையப்பன் தலைமை வகித்தார். மாநில அமைப்புச் செயலர் எம். ரவி, மாநிலப் பொதுச்செயலர் ஜி. ரவீந்தரன், மாநிலப் பொருளாளர் ஐ. சாகுல் அமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  கூட்டத்தில், கிரில் தயாரிப்பாளர்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கி, மின்சார கட்டணத்துடன் வசூலிக்கப்படும் 15 சத சர் சார்ஜை நீக்க வேண்டும். கிரில் தொழில் முனைவோருக்கு மானியக்கடன் வழங்க வேண்டும். இரும்பு மற்றும் மூலப்பொருளுக்கு நிலையான விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும். அரசுக் கட்டடங்களில் ஒப்பந்தகாரர்கள் வாயிலாக பரவலாக வேலைகள் வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். கல்வித் துறையில் தொழிற்பயிற்சி மையங்களில் கிரில் தொழிலுக்கென, கிரில்டெக் தனிப்பாட பிரிவை உருவாக்க வேண்டும்.   கிரில் தொழிற்கூடங்களுக்கு அதிக பட்சமாக 15 எச்.பி. மின் திறனாக உயர்த்தி, மின் கட்டணத்தில் மானிய சலுகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  இதில், உயர்மட்டக்குழு தலைவர் என். சண்முகசுந்தரம், மாநில துணைத் தலைவர் கே. கோவிந்தராஜன், மாநில கொள்கை பரப்பு செயலர் பி.ஜி. கந்தசாமி, ஜி. வெங்கடேஷ்வரன் ஆகியோர் பேசினர்.

  பெரம்பலூர் மாவட்ட தலைவர் ஜி. ஜோதீஸ்வரன், கவுரத்தலைவர் பி. கணேசன்,  மாவட்ட துணை செயலர் எம். இளங்கோவன், துணை தலைவர் ஐ. பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  பெரம்பலூர் மாவட்ட செயலர் பி. ராஜா வரவேற்றார். மாவட்ட பொருளாளர் ஆர்.  சரவணன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai