சுடச்சுட

  

  பெரம்பலூர் தொகுதியில் 152 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

  By பெரம்பலூர்  |   Published on : 10th March 2014 04:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் 152 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என்றார் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான தரேஸ் அஹமது.

  இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் குளித்தலை, லால்குடி, மணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி), பெரம்பலூர் (தனி) ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகள் அடங்கியுள்ளன.

  இதில், குளித்தலை சட்டப்பேரவை தொகுதியில் உள்ள 247 மையங்களில், 17 வாக்குச்சாவடிகளும், லால்குடி சட்டப்பேரவை தொகுதியில் உள்ள 232 மையங்களில், 17 வாக்குச்சாவடிகளும், மணச்சநல்லூர் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள 250 மையங்களில், 10 வாக்குச்சாவடிகளும், முசிறி சட்டப்பேரவை தொகுதியில் உள்ள 244 மையங்களில் 15 வாக்குச்சாவடிகளும், துறையூர் (தனி) சட்டப்பேரவை தொகுதியில் உள்ள 247 மையங்களில், 7 வாக்குச்சாவடிகளும், பெரம்பலூர் (தனி) சட்டப்பேரவை தொகுதியில் உள்ள 297 மையங்களில், 86 வாக்குச்சாவடிகளும் பதற்றம் நிறைந்தவையாக அறியப்பட்டுள்ளன.

  பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் மக்களவை தொகுதிக்குள்பட்ட குன்னம் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள 293 வாக்குச்சாவடி மையங்களில், 79 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவை என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai