சுடச்சுட

  

  பொறியியல் கல்லூரியில் ஆண்டு விளையாட்டு விழா

  By பெரம்பலூர்  |   Published on : 10th March 2014 04:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெரம்பலூர் சீனிவாசன் பொறியியல் கல்லூரியின் 8-ம் ஆண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

  தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன் தலைமை வகித்தார். செயலர் பி. நீலராஜ் முன்னிலை வகித்தார். 

    அனைத்து துறை சார்ந்த போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்று சிறந்த சாம்பியன் பட்டத்தை மாணவர்கள் பிரிவில் மெக்கானிக்கல் துறையும், மாணவிகள் பிரிவில் கணினி பொறியியல் துறையும் பெற்றன. தனிநபர் சாம்பியன் பட்டத்தை கணினி பொறியியல் துறை மாணவி கலைவாணி, மாணவர்கள் பிரிவில் இறுதி ஆண்டு மெக்கானிக்கல் துறை மாணவர் ராகில் ஆகியோர் பெற்றனர். 

  போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சென்னை ரெனால்ட் நிசான் மனிதவள மேம்பாட்டுத் துறை மூத்த மேலாளர் மோகன்தாஸ் கிருஷ்ணசாமி பரிசு வழங்கிப் பாராட்டினார்.

  விழாவில் தனலட்சுமி சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வடிவழகன், தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சுகுமார், தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி துணை முதல்வர் நந்தகுமார், சீனிவாசன் பொறியியல் கல்லூரி துணை முதல்வர் ராஜ்குமார்  உள்ளிட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

  ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர்கள் வெங்கடேசன், தினேஷ்குமார், மஞ்சுளா ஆகியோர்  செய்தனர்.  முதல்வர் கே. இளங்கோவன் வரவேற்றார். பேராசிரியர் ஜோசப் பெர்னான்டஸ் நன்றி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai