சுடச்சுட

  

  வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பது தொடர்பான சிறப்பு முகாமில் 8,527 மனுக்கள் பெறப்பட்டன என்றார் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான தரேஸ் அஹமது.

  இதுகுறித்து அவர்  வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, பெரம்பலூர் வட்டத்தில் 1,042 ஆண்களும், 1,334 பெண்களும், வேப்பந்தட்டை வட்டத்தில் 721 ஆண்களும், 849 பெண்களும், குன்னம் வட்டத்தில் 820 ஆண்களும், 1,019 பெண்களும், ஆலத்தூர் வட்டத்தில் 1,295 ஆண்களும், 1,805 பெண்களும், குன்னம் சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட செந்துறை வட்டத்தில் 649 ஆண்களும், 723 பெண்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மனு அளித்தனர். பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள 590 வாக்குச்சாவடி மையங்களிலும், 3,832 ஆண்களும், 4,695 பெண்களும் என மொத்தம் 8,527 பேர் விண்ணப்பித்தனர்.

   தோமினிக் பள்ளியில் நடைபெற்ற  முகாமை, மாவட்ட வருவாய் அலுவலர் வி. ராஜன்துரை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai