சுடச்சுட

  

  பெரம்பலூர் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்தார்.
   பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகேயுள்ள அடைக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் போ. ராஜு (60). விவசாயியான இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு தனக்குச் சொந்தமான வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றாராம்.
   திங்கள்கிழமை அதிகாலை வரை அவர் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களிலும் அவரை தேடினர். இதனிடையே பயல் கிணற்றில் ராஜு தவறி விழுந்து இறந்து கிடந்தது தெரியவந்தது. தகலறிந்த பாடாலூர் போலீஸôர் இறந்தவரின் சடலத்தை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து அவரது மனைவி பாப்பாத்தி அளித்த புகரின்பேரில், உதவி ஆய்வாளர் விஜயலட்சுமி வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai