சுடச்சுட

    

    தமிழக தமிழாசிரியர் கழகத்தின் பெரம்பலூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை தேர்வு செய்யப்பட்டனர்.
     பெரம்பலூர் மெüலானா மேல்நிலைப் பள்ளியில் தமிழக தமிழாசிரியர் கழக பெரம்பலூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
     தமிழக தமிழாசிரியர் கழகத்தின் மாநில இணைச் செயலரும், தேர்தல் ஆணையாளருமான அ. ரவிச்சந்திரன் தலைமையில் நடத்தப்பட்ட தேர்தலில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழாசிரியர்கள் புதிய பொறுப்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
     மாவட்டத் தலைவராக வை. தேசிங்குராஜன், துணைத் தலைவராக மு. சன்னியாசி, செயலராக த. மாயகிருஷ்ணன், இணைச் செயலராக பெ. ஜெயராமன், துணைச் செயலராக பி. செந்தமிழன், பொருளராக க. கிருஷ்ணராஜு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு தமிழாசிரியர்கள் மற்றும் சங்கப் பொறுப்பாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai