சுடச்சுட

  

  பெரம்பலூரில் தொழிற்சாலை  அமைக்க வலியுறுத்தல்

  By  பெரம்பலூர்,  |   Published on : 11th March 2014 02:39 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெரம்பலூரில் தொழிற்சாலை அமைக்க வேண்டுமென தேவேந்திர குல நலச்சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
   மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேவேந்திர நலச்சங்க நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்டத் தலைவர் அன்பு. தேவேந்திரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
   மாவட்டச் செயலர் துரை. மோகன்ராஜ், பொருளாளர் கார்த்திக்ராஜா, மாவட்ட அமைப்பாளர் தியாகு. தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
   கூட்டத்தில், பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் உள்ள பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்டு தனியார் தொழிற்சாலை தொடங்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ் சேவையை பெரம்பலூர் மக்களவை தொகுதிக்குள்பட்ட 11 ஒன்றியத்திற்கும் தலா 3 வீதம் விரிவுப்படுத்த வேண்டும். தேவேந்திர குல நலச்சங்கத்தை அரவணைத்து, உரிய அங்கீகாரம் அளிக்கும் அரசியல் கட்சிக்கு மக்களவை தேர்தலில் ஆதரவு தெரிவிப்பது. சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
   மாவட்ட இளைஞரணி நிர்வாகி அருண், ஒன்றியப் பொறுப்பாளர்கள் முரளி, ரமேஷ், சூர்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai