சுடச்சுட

    

    பெரம்பலூரில் வாகன  தணிக்கைக்கு 6 குழுக்கள்

    By  பெரம்பலூர்,  |   Published on : 11th March 2014 02:37 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்டத்தில் வாகனங்களைத் தணிக்கை செய்ய 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
     இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான தரேஸ் அஹமது வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் விதிகளை மீறும் வாகனங்களைக் கண்காணிக்க
     6 நபர்களை உள்ளடக்கிய 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
     பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வட்டாட்சியர்கள் தமிழ்ச்செல்வன் (9942039690), பழனிதேவி (9787713837), ராமு (9566836057) ஆகியோர் தலைமையிலான குழுக்கள், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வட்டாட்சியர் முருகன் (8344879387), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூங்குழலி (7402607794), சேகர் (7402607754) தலைமையிலான தீவிர வாகனத் தணிக்கை குழுக்கள், சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
     இதேபோல, தேர்தல் செலவினங்களைக் கண்காணிக்கும் வகையில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பெரம்பலூர் சட்டப்பேரவை தொகுதிக்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நசீர் அஹமது (9751720605), குன்னம் சட்டப்பேரவை தொகுதிக்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் (9943360625) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai