சுடச்சுட

  

  பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 4 பேரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனர்.
   பெரம்பலூர் மாவட்டத்தில் 25 ஆயிரம் ஹெக்டேரில் உள்ள காப்புக் காடுகளில், ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இந்நிலையில், குன்னம் அருகே சித்தளி வனப்பகுதியில் 8 பேர் துப்பாக்கியால் சுட்டு வன விலங்குகளை வேட்டையாடுவதாக பொதுமக்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற பொதுமக்கள் அந்தக் கும்பலில் இருந்த 4 பேரை பிடித்து மருவத்தூர் போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் திருச்சி மாவட்டம், துறையூர் அருகே பச்சைமலையில் உள்ள நாகூர் கிராமத்தை சேர்ந்த சுதாகர் (23), முத்துசாமி (27), காமராஜ் (37), பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்த செல்லசாமி (31) என்பது தெரியவந்தது.
   நால்வரையும் கைது செய்த போலீஸôர், அவர்களிடமிருந்த நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்து, பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பியோடிய பச்சைமலை பகுதியைச் சேர்ந்த ராமசாமி, செல்லதுரை, குப்புசாமி, ராஜு ஆகியோரைத் தேடி வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai